சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 87 பேர் கைது


சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 87 பேர் கைது
x
தினத்தந்தி 16 Feb 2018 3:00 AM IST (Updated: 16 Feb 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 87 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய சட்டப்பூர்வ ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.9,000 வழங்க வேண்டும், சத்துணவு ஊழியர்கள் ஓய்வுபெறும்போது வழங்கப்படும் பணிக்கொடையை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ராமநாதபுரம் யூனியன் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் மணிமொழி தலைமை தாங்கினார். மறியல் போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட துணை தலைவர் கணேசமூர்த்தி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கருணாநிதி, மாவட்ட செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட பொருளாளர் மீனாட்சி கண்ணகி நன்றி கூறினார். போராட்டத்தில் கலந்துகொண்ட சத்துணவு ஊழியர்கள் திரளாக சென்று மறியலில் ஈடுபட முயன்றபோது 64 பெண்கள் உள்பட 87 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story