மானூர் அருகே கிராம மக்கள் முற்றுகை போராட்டம் தங்களது இடத்தை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக புகார்


மானூர் அருகே கிராம மக்கள் முற்றுகை போராட்டம் தங்களது இடத்தை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக புகார்
x
தினத்தந்தி 16 Feb 2018 2:30 AM IST (Updated: 16 Feb 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

தங்களது இடத்தை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக கூறி மானூர் அருகே கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மானூர்,

தங்களது இடத்தை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக கூறி மானூர் அருகே கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம மக்கள் முற்றுகை

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள எஸ்.சுப்புனாபுரம் கிராம பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று சூரிய மின்சக்தி உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கியது. இதனை அறிந்த அந்த கிராம மக்கள், தொழிற்சாலை அமைக்கப்படும் இடத்துக்கு திரண்டு வந்தனர். கிராம மக்களுடன் பள்ளிக்கூட மாணவ– மாணவிகளும் வந்து முற்றுகையிட்டனர். அங்கு தரையில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, தாசில்தார் மேனகா மற்றும் போலீசார், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அதிகாரிகள் சமரசம்

போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. போராட்டம் நடத்தியவர்கள் கூறுகையில், எங்களது பட்டா நிலத்தை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்து தொழிற்சாலை அமைக்க முயற்சி செய்கிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர். அதற்கு அந்த நிறுவனத்தினர், நாங்கள் கிரயம் செய்த நிலத்தில்தான் தொழிற்சாலை அமைக்கிறோம் என்றனர்.

இதையடுத்து அதிகாரிகள் கூறுகையில், இரு தரப்பினரும் பிரச்சினைக்குரிய இந்த நிலத்துக்கான ஆவணங்களை தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வாருங்கள். வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேசி தீர்வு காணப்படும் என்றனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story