வாயில் கருப்பு துணி கட்டி சி.ஐ.டி.யூ. துறைமுக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மெட்ராஸ் போர்ட் - டாக் எம்பிளாயீஸ் யூனியன் (சி.ஐ.டி.யூ) சார்பில் சென்னை துறைமுக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை,
அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரவேண்டும், ஊதிய உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மெட்ராஸ் போர்ட் - டாக் எம்பிளாயீஸ் யூனியன் (சி.ஐ.டி.யூ) சார்பில் சென்னை துறைமுக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் பொதுச்செயலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அகில இந்திய நீர்வழி போக்குவரத்து சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் டி.நரேந்திர ராவ் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ. துறைமுக ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் வாயில் கருப்பு துணி கட்டி பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது அ.கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், “சென்னை துறைமுக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வு, சீருடை, சோப்பு, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை செய்து தரவேண்டும். வேலைவாய்ப்புகளை பெருக்கிட வேண்டும். மதுரவாயல் உயர்மட்ட மேம்பால திட்டம், எண்ணூர் மணலி விரைவுசாலை திட்டங்கள் உடனடியாக முடிக்கப்பட வேண்டும். அதை வலியுறுத்தியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம்”, என்றார்.
Related Tags :
Next Story