முதல்-மந்திரி பட்னாவிசுடன், உத்தவ் தாக்கரே திடீர் சந்திப்பு
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார்.
மும்பை,

மோதல் போக்கு
பா.ஜனதா தலைமையிலான கூட்டணி கட்சியில் சிவசேனா அங்கம் வகித்தாலும், இரு கட்சிகளுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. சமீபத்தில் சிவசேனா இனி வரும் அனைத்து தேர்தல்களையும் தனித்தே சந்திக்கும் என அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார். இது இரு கட்சிகளின் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் பா.ஜனதா மூத்த மந்திரி ஒருவர், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்துள்ள நிலையில், சிவசேனாவும், பா.ஜனதாவும் ஒன்றிணைந்து செயல்படாவிட்டால் வரும் சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளுமே தோல்வியை தழுவும் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
திடீர் சந்திப்பு
இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று மாலை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே திடீரென்று சந்தித்து பேசினார்.
அப்போது அவர்கள் அரசியல் நிலவரம் மற்றும் ரத்னகிரி மாவட்டத்தில் அமைய திட்டமிடப்பட்டு உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பிரச்சினை குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

Related Tags :
Next Story