‘ரத்னகிரியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க விடமாட்டோம்’ சிவசேனா மந்திரி சொல்கிறார்
உள்ளூர் மக்களின் எதிர்ப்பை மீறி ரத்னகிரியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க விடமாட்டோம் என்று சிவசேனா மந்திரி கூறினார்.
மும்பை,

சுத்திகரிப்பு ஆலை
ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள நாநர் பகுதியில் ரூ.1.45 லட்சம் கோடி செலவில் பிரமாண்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என கூறப்படுகிறது.
இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வருகிற 18-ந் தேதி மும்பையில் தொடங்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தாகும் என கருதப்படுகிறது.
எதிர்ப்பு
இந்த திட்டத்தால், நிலப்பரப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என கூறி, நாநர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிவசேனா கட்சியும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிவசேனாவை சேர்ந்த மந்திரி சுபாஷ் தேசாய் கூறியதாவது:-
இதுவரை இந்த திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. எங்கள் நிலைபாட்டில் நாங்கள் தெளிவாக உள்ளோம். எந்த சூழ்நிலையிலும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பை மீறி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை தொடங்க விடமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story