நவிமும்பையில் அழகுசாதன கடையில் தீ விபத்து தாய், மகள் மூச்சுத்திணறி சாவு
நவிமும்பையில், அழகுசாதன கடையில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, ஏற்பட்ட புகைமூட்டத்தில் தாய், மகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மும்பை,

தீ விபத்து
நவிமும்பை ஐரோலி 3-வது செக்டரில் உள்ள ஒரு கட்டிடத்தின் தரைதளத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. நேற்று அதிகாலை 4 மணியளவில் இங்குள்ள அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக கடைக்குள் இருந்து கரும்புகை குபுகுபுவென வெளியேறியது. அதிகாலை நேரம் என்பதால் மாடிகளில் வசித்து வரும் குடியிருப்புவாசிகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
இதன் காரணமாக அவர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டது உடனடியாக தெரியவில்லை.
இந்தநிலையில், அதிக புகை மூட்டம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு திடுக்கிட்டு எழுந்த குடியிருப்புவாசிகள் பதறி அடித்து கொண்டு கீழே இறங்கி ஓடினார்கள். அப்போது, கடைக்குள் கரும்புகையுடன் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தாய், மகள் சாவு
தகவல் அறிந்து வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர் யாரும் கட்டிடத்தின் உள்ளே சிக்கியிருக்கிறார்களா? என தீயணைப்பு வீரர்கள் தேடிப்பார்த்தனர். அப்போது, கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள வீட்டில் ஒரு பெண்ணும், சிறுமியும் பிணமாக கிடந்தனர். அவர்களது உடலில் தீக்காயம் ஏதும் இல்லை. இதன் மூலம் இருவரும் புகையின் காரணமாக மூச்சுத்திணறி பலியானது தெரியவந்தது.
விசாரணையில், பலியான பெண் மஞ்சு சவுத்திரி(வயது28) என்பதும், இறந்து கிடந்த சிறுமி அவரது மகள் காயத்திரி(5) என்பதும் தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார் தாய், மகள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்கசிவு காரணமாக கடையில் தீப்பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Tags :
Next Story