13-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டுமான தொழிலாளி பலி கட்டிட மேற்பார்வையாளர் கைது
13-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டுமான தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கட்டுமான மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,

தொழிலாளி சாவு
மும்பை ஜோகேஸ்வரி மேற்கு ஆதர்ஸ் நகரில் 22 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமான பணியில் புனேஸ்வர் பிரசாத் (வயது20) என்ற தொழிலாளியும் ஈடுபட்டிருந்தார். சம்பவத்தன்று மாலை இவர் கட்டிடத்தின் 13-வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, கால் தவறி கீழே விழுந்துவிட்டார்.
இதில், படுகாயம் அடைந்த அவரை மற்ற தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேற்பார்வையாளர் கைது
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஒஷிவாரா போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையின் போது, கட்டிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் கட்டுமான பணிகள் நடந்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த கட்டிடத்தின் மேற்பார்வையாளர் ஜிக்னேஷ்(40) என்பவரை கைது செய்தனர்.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Tags :
Next Story