ஆப்பிரிக்காவில் ஐரோப்பா..!


ஆப்பிரிக்காவில் ஐரோப்பா..!
x
தினத்தந்தி 16 Feb 2018 10:45 AM IST (Updated: 16 Feb 2018 10:33 AM IST)
t-max-icont-min-icon

ஆப்பிரிக்காவின் மொராக்கோ நாட்டில், ‘இப்ரான்’ என்ற மிகச்சிறிய நகரம் இருக்கிறது. இதை ‘லிட்டில் சுவிட்சர்லாந்து’, ‘ஆப்பிரிக்காவின் ஐரோப்பா’ என்று புகழ்கிறார்கள். ஏனெனில் இந்த நகரம் முழுவதையுமே பனிப்போர்வை போர்த்தியிருக்கிறது.

வறண்ட பூமிக்கு பெயர் பெற்ற ஆப்பிரிக்காவில், இதுபோன்ற பனிப்பிரதேசம் இருப்பதுதான் ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது. அத்துடன் சுவிட்சர்லாந்தை பிரதிபலிக்கும் அம்சங்களும், இப்ரான் நகரில் நிறைந்திருக்கின்றன.

உயரமான சிவப்பு கூரை கொண்ட கட்டிடங்கள், ஓக் மரங்கள் என சுவிட்சர்லாந்தை கண்முன் நிறுத்தும் இப்ரான் நகரம், பனிச்சறுக்கு ஆர்வலர்களின் சொர்க்கப்புரியாகவும் திகழ்கிறது. அதனால் ஆண்டு முழுவதும் இந்த நகரை நோக்கி மக்கள் படையெடுத்த வண்ணம் இருக்கிறார்கள்.

# பனியை உருக்கி, ஆப்பிரிக்கா காட்டிற்குள்  திருப்பிவிட்டால் நன்றாகத்தான் இருக்கும்.

Next Story