மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் கல்லூரி விரிவுரையாளர் பலி
துவரங்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் கல்லூரி விரிவுரையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
துவரங்குறிச்சி,
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த வளநாடு அருகே உள்ள ஊத்துக்குளி முருக்ககுடி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 29). இவர் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் சொந்த வேலையாக வெளியில் சென்று விட்டு பின்னர் முருக்ககுடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
வேம்பனூர் காலனி அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையோரத்தில் இருந்த மரத்தில், அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் படுகாயம் அடைந்து சாலையோரத்தில் கிடந்த கணேசனை யாரும் கவனிக்கவில்லை. இதனால் அவர் நீண்டநேரமாக உயிருக்கு போராடியுள்ளார். இதனையடுத்து அவர் பரிதாபமாக அங்கேயே இறந்தார். இந்நிலையில் அவர் இறந்து கிடந்ததை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் கு தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story