பிளஸ்-2 பொதுத்தேர்வை 8 ஆயிரத்து 410 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்
அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 8 ஆயிரத்து 410 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர் என்று மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா தெரிவித்துள்ளார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு அரசு பொதுத்தேர்வு முன்னேற்பாட்டு பணிகள் குறித்த கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா தலைமை தாங்கி, பேசியதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. மேலும், பொதுத் தேர்வு வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வை 72 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 3,851 மாணவர்களும், 4,559 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 410 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதற்காக 30 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களை கண்காணிக்க மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் 70 பறக்கும் படையினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு செய்முறைத்தேர்வு வருகிற 24-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. பொதுத் தேர்வு மார்ச் மாதம் 7-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 16-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வை 76 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 3 ஆயிரத்து 803 மாணவர்களும், 4 ஆயிரத்து 836 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 639 மாணவ, மாணவி 30 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர். மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் 70 பறக்கும் படையினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அறிவியல் பாடத்திற்கான செய்முறைத்தேர்வு வருகிற 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும், பொதுத் தேர்வு மார்ச் மாதம் 16-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 20-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வை 165 உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 5 ஆயிரத்து 313 மாணவர்களும், 5 ஆயிரத்து 798 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 111 மாணவ, மாணவிகள் 43 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர். 43 மையங்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் 86 பறக்கும் படையினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கட்டுகள் கொண்டு செல்வதற்கும், தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் கட்டுகளை விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு எடுத்து வருவதற்கும் அரியலூர் கல்வி மாவட்டத்திற்கு 3 வழித்தட அலுவலர்களும், உடையார்பாளையம் கல்வி மாவட்டத்திற்கு 6 வழித்தட அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு, அவர்கள் ஆயுதம் தாங்கிய காவலர்களின் பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்வார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கட்டுகள் கொண்டு செல்வதற்கும், தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் கட்டுகளை விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு எடுத்து வருவதற்கும் அரியலூர் கல்வி மாவட்டத்திற்கு 4 வழித்தட அலுவலர்களும், உடையார்பாளையம் கல்வி மாவட்டத்திற்கு 6 வழித்தட அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு, அவர்கள் ஆயுதம் தாங்கிய காவலர்களின் பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்வார்கள். இத்தேர்வுகளை நேர்மையாகவும், முறைகேடுகளுக்கு இடமளிக்காமலும் நடத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், அரியலூர் கோட்டாட்சியர் மோகனராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அனந்தநாராயணன், துணை போலீஸ் சூப்பிரண்டு் மோகன்தாஸ், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மொழியரசி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் மற்றும் மின்வாரிய செயற்பொறியாளர், அரசு போக்குவரத்து கழக அரியலூர், ஜெயங்கொண்டம் கிளை மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story