திருமங்கலம் அருகே கொடூர சம்பவம்: பெட்ரோல் ஊற்றி மாணவி மீது தீவைப்பு
9-ம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்த வாலிபர், தன்னை காதலிக்க மறுத்த அந்த மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார்.
மதுரை,
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டையைச் சேர்ந்தவர், சந்தானம். இவருடைய மகன் பாலமுருகன் (வயது 23), திருமங்கலத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவர், அதே பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை கடந்த 6 மாதங்களாக ஒருதலையாக காதலித்து வந்தார். இதுபற்றி அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் பலமுறை எச்சரித்தும், பாலமுருகன் கேட்காமல் அந்த மாணவியை பின்தொடர்ந்து வந்தார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, பாலமுருகனை அழைத்து எச்சரித்து அனுப்பினர்.
அதன்பிறகும் பாலமுருகன் மாறவில்லை. தொடர்ந்து அந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்தார். தன்னை காதலிக்கவில்லையென்றால் மாணவியின் வீட்டிற்கே வந்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார்.
இந்த நிலையில் மாணவி நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்புவதற்கு பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை மாணவி மீது ஊற்றி தீ வைத்தான். இதனால் பதறிய மாணவி அலறினார். அப்போது மாணவியின் தாய் பேச்சியம்மாள் வயலில் வேலை பார்த்துவிட்டு அந்த பகுதி வழியாக வந்து கொண்டிருந்தார்.
அவர் அருகில் வருவதற்குள் மாணவியின் உடலில் தீப்பற்றி எரிந்தது. மாணவியின் தாயும், அருகில் இருந்தவர்களும் ஓடி வந்து தீயை அணைத்து மாணவியை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு மாணவி கொண்டு வரப்பட்டார். 65 சதவீத தீக்காயம் அடைந்துள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில், மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய பாலமுருகனை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story