சிவகாசியில் 19-ந்தேதி ஆலோசனை கூட்டம்: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அறிக்கை
ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆலோசனை கூட்டம் சிவகாசியில் வருகிற 19-ந் தேதி நடைபெறும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற அடிப்படையில் தமிழக மக்களுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்து மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க. சார்பில் வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்திலும் அ.தி.மு.க. சார்பில் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா ஆலோசனை கூட்டம் சிவகாசியில் வருகிற 19-ந் தேதி(திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு சிவகாசி பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டல் ‘ஸ்பார்க்கில் இன்’ னில் நடைபெற உள்ளது. ராதாகிருஷ்ணன் எம்.பி. தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு சந்திரபிரபா எம்.எல்.ஏ. முன்னிலை வகிக்கிறார்.
இதில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, ரத்ததான முகாம் நடத்துவது, முதியோர் இல்லங்களுக்கு சென்று அன்னதானம் வழங்குவது, வேட்டி-சேலைகள் வழங்குவது, கோவில்களில் அன்னதானம் வழங்குவது, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பது, விளையாட்டு போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
எனவே கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story