திருமானூர் அருகே விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம்
திருமானூர் அருகே விவசாயிகள் வயலில் இறங்கி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமானூர்,
காவிரிநீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் உள்ள பிரச்சினை குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது.
அதில், தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தண்ணீர் தமிழகத்துக்கு போதுமானதல்ல எனக்கூறி அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள க.மேட்டுத்தெரு கிராமத்தில் வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் மு.மணியன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டக்குழு வைத்திலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story