அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
மோகனூர் பஸ் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
மோகனூர்,
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மோகனூர் பஸ் நிலைய வளாகத்தில் நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டது.
இந்த புகைப்படக் கண்காட்சியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் நாமக்கல் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், புதிய திட்டப்பணிகளை தொடஙகி வைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் கலந்துகொண்ட முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த புகைப்படக் கண்காட்சியினை பஸ் நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை இப்புகைப்படக் கண்காட்சியின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது என்று தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) மோகன்ராஜ் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story