குளித்தலை பகுதியில் ரூ.4¼ கோடியில் புதிய கட்டிடம், தார் சாலை அமைக்கும் பணி


குளித்தலை பகுதியில் ரூ.4¼ கோடியில் புதிய கட்டிடம், தார் சாலை அமைக்கும் பணி
x
தினத்தந்தி 17 Feb 2018 4:00 AM IST (Updated: 17 Feb 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.4 கோடியே 25 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

குளித்தலை,

இதற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அய்யர்மலை அரசு கலைக்கல்லூரியில் ரூ.3 கோடியே 56 லட்சத்தில் 16 வகுப்பறைகள் மற்றும் 3 அறிவியல் ஆய்வுக்கூடங்கள் கட்டவும், தோகைமலை ஒன்றியம் கூடலூர் ஊராட்சியில் குன்னாகவுண்டன்பட்டி முதல் பேரூர் தேசியமங்கலம் சாலை வரை ரூ.45 லட்சத்து 50 ஆயிரத்தில் தார் சாலை அமைக்கும் பணியினையும், கழுகூர் ஊராட்சி மணப்பாறை சாலை முதல் செம்பாறை கல்லுப்பட்டி வரை ரூ.23 லட்சத்து 65 ஆயிரத்தில் தார் சாலை அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.4 கோடியே 25 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் பூமி பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்து பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதில் குளித்தலை எம்.எல்.ஏ. ராமர், முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வினாயகம், மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அன்பரசு, தோகைமலை ஒன்றிய செயலாளர் கே.ஆர்.விஜயன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ரெங்கசாமி, துரைகவுண்டர், பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story