விருத்தாசலத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் கைது: 8-ம் வகுப்பு சான்றிதழை போலியாக தயாரித்து பலருக்கு வழங்கியது அம்பலம்
விருத்தாசலத்தில் கைதான ஓய்வுபெற்ற ஆசிரியர், 8-ம் வகுப்பு சான்றிதழை போலியாக தயாரித்து பலருக்கு வழங்கியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
விருத்தாசலம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆயியார் மடத்தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 75). இவர் விருத்தாசலத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து, கடந்த 1995-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். இவர் போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்வதாக, திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் போலியாக கல்வி சான்றிதழை தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின்படி உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் மற்றும் போலீசார் ஆயியார்மடத்தெருவில் உள்ள ராமகிருஷ்ணனின் வீட்டிற்குள் நேற்று முன்தினம் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
சோதனையில் விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி ஆகிய 3 தாலுகாக்களில் உள்ள அரசு பள்ளிகளின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ்கள், உண்மை தன்மை சான்றிதழ்கள், போலி முத்திரைகளை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-
ராமகிருஷ்ணன், தான் பணிபுரிந்த பள்ளி தாளாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விருப்ப ஓய்வுபெற்றார். அதன் பிறகு அவர், போலியாக கல்வி சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இடைநிலை கல்வி சான்றிதழ் மற்றும் 8-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ்களை போலியாக வெவ்வேறு பள்ளிகளின் பெயர்களில் தயாரித்து அந்தந்த பள்ளிகளின் போலி முத்திரைகளை கொண்டு சீல் வைத்து போலியாக சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்துள்ளார். இதற்காக ஒரு சான்றிதழுக்கு ரூ.500-ல் இருந்து ரூ.1,000 வரை வாங்கியுள்ளார்.
ஓட்டுநர் அடையாள அட்டை எடுப்பதற்கும், கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. எனவே பலர், ராமகிருஷ்ணனை நாடி, எந்த பள்ளிக்கூடத்தின் பெயரில் சான்றிதழ் வேண்டும் என்று மட்டும் சொன்னால் போதும், அதற்கு ஏற்றாற்போல் போலி சான்றிதழை தயாரித்து அவர் வழங்கி உள்ளார். யார்-யார்? அவரிடம் போலி சான்றிதழ் பெற்றுள்ளனர் என்ற விவரத்தையும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். விசாரணை முடிந்ததும் ராமகிருஷ்ணன், விருத்தாசலத்தில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுவரை ராமகிருஷ்ணனிடம் போலி கல்வி சான்றிதழ் பெற்றவர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு விசாரணை நடத்தினால், போலி சான்றிதழை வைத்து யாரேனும் அரசு பணியில் சேர்ந்திருந்தால் அவர்களும் சிக்குவார்கள் என தெரிகிறது.

Related Tags :
Next Story