பாம்புக்கடி வைத்திய பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
தலைவாசல் அருகே பாம்புக்கடி வைத்திய பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு ஆய்வாளர்கள் அதனை ஆய்வு மேற்கொண்டனர்.
சேலம்,
சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், ஆசிரியர் பெருமாள், மருத்துவர் பொன்னம்பலம், ஜீவநாராயணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தலைவாசல் அருகே புத்தூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த ஊரில் உள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் ஒரு இடத்தில், பாம்புக்கடியை குணப்படுத்த மேற்கொண்ட வைத்தியம் தொடர்பான பழங்கால கல்வெட்டு கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. தமிழக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் சு.ராஜகோபால், அது பாம்பு தீண்டியவர்களை குணப்படுத்த பயன்படுத்திய கல்வெட்டு என உறுதி செய்தார். இதுபற்றி ஆய்வு குழுவினர் கூறியதாவது:-
புத்தூர், கல்வராயன் மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். மலைப்பகுதியான இங்கு பாம்பு புற்று நிறைந்திருந்ததால் புற்றூர் என பெயர் ஏற்பட்டு பின்பு புத்தூர் என ஊர் பெயர் மருவியிருக்கலாம். சீராக இல்லாத கல்லில் (கல்வெட்டு) எழுத்து உள்ளது. கல்வெட்டின் மேல்பகுதியில் இடதுபுறத்தில் ஒன்றன்கீழ் ஒன்றாக இரண்டு சூலங்களும், அதன்கீழ் இரண்டு பாம்புகள் உடலை தூக்கியவாறு இருக்கும்படி வரையப்பட்டுள்ளது. இடதுபுறம் உள்ள பாம்பு ஒரு மனிதனை தீண்டுவது போல் உள்ளது. கல்வெட்டு சிவபெருமானை போற்றுகிறது. சிவபெருமான் இருக்க பாம்பால் பயமில்லை என குறிக்கிறது. குரு மஹாதேவ குருவே சிவா என கல்வெட்டு தொடங்குகிறது. பாம்பு கடித்த பின் விஷம் இறங்க வைக்கப்பட்டுள்ள மந்திரக்கல் வழிபாட்டை இது குறிக்கிறது. மருத்துவ வசதிகள், போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத அந்த காலத்தில் பாம்பு தீண்டியவர்களை இதுபோன்ற கல் அருகே அழைத்து வந்து பாடம் போட்டு மந்திரங்கள் சொல்லி மூலிகைகள் கொடுத்து பாம்பின் விஷத்தை முறிக்க முயற்சி செய்துள்ளனர் என்பது இந்த கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது. இவ்வாறு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story