பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவர் சாவு


பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவர் சாவு
x
தினத்தந்தி 17 Feb 2018 4:00 AM IST (Updated: 17 Feb 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மாணவர் பரிதாபமாக இறந்தார்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கீழ் நெடுங்கல் காலனியை சேர்ந்தவர் கோவிந்தராஜுலு. கூலித்தொழிலாளி. இவரது மகன் விஜய் (வயது 14). இவர் பள்ளிப்பட்டு தாலுகா கீச்சலம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை வழக்கம்போல மாணவன் விஜய் பள்ளிக்கு புறப்பட்டார். நெடுங்கல் கிராமத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறிய அவர் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தார்.

வழியில் வெங்கடாபுரம் சாலை வளைவில் பஸ் திரும்பியபோது படிக்கட்டில் நின்ற விஜய் எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த விஜய்யை உறவினர்கள் சிகிச்சைக்காக பொதட்டூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story