எனது தலைமையில் 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சி புரிந்தது நிம்மதி அளிக்கிறது சித்தராமையா உருக்கம்
எனது தலைமையில் 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சி புரிந்தது நிம்மதி அளிக்கிறது என்று பட்ஜெட் உரையின்போது முதல்-மந்திரி சித்தராமையா உருக்கமாக கூறினார்.
பெங்களூரு,

கர்நாடக சட்டசபை
கர்நாடக சட்டசபையின் கூட்டு கூட்டத்தொடர் கடந்த 5-ந் தேதி விதான சவுதாவில் தொடங்கியது. இது நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல்நாள் கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றினார். இந்த கூட்டம் 9-ந் தேதி வரை நடந்து முடிந்தது.
இதையடுத்து மீண்டும் சட்டசபை வருகிற 16-ந் தேதி(அதாவது நேற்று) கூடும் என்றும், அன்றைய தினம் முதல்-மந்திரி சித்தராமையா 2018-2019-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டது.
5 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சி
அதன்படி நேற்று காலையில் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் சட்டசபை கூடியது. கூட்டத்தை சபாநாயகர் கே.பி.கோலிவாட் தொடங்கி வைத்தார். அதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா பட்ஜெட் உரை நிகழ்ச்சினார். அப்போது அவர் கூறியதாவது:-
நான்(சித்தராமையா) தற்போது 13-வது கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். இப்படி ஒரு பாக்கியம் எனக்கு கிடைத்ததற்கு நான் பெருமை அடைகிறேன். எனது தலைமையிலான காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சி புரிந்துள்ளது. இது எனக்கு நிம்மதியை தருகிறது. நான் விவசாயியின் மகன். எனக்கு விவசாயிகளின் கஷ்ட, நஷ்டங்கள் நன்றாக தெரியும். இந்த அரசு விவசாயிகளின் நலனுக்காக பாடுபடும் அரசாகும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் விவசாயிகளுக்கு ஆதரவான அரசு.
வேலைவாய்ப்பு அதிகரிப்பு
இந்த 5 ஆண்டுகால ஆட்சியில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் ஆரோக்கியம், சுகாதாரம், உணவு இப்படி பல்வேறு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களை கருத்தில் கொண்டுதான் அன்னபாக்யா, ஷீர பாக்யா, மலிவு விலை இந்திரா உணவகம் இப்படி பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் வரையிலான விவசாயக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொழில்நுட்ப துறையில் அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் எழுந்துள்ளன.
தொழில்நுட்ப துறையில் முதலிடம்
தொழில்நுட்ப துறையில் கர்நாடகம் முதலிடத்தில் இருப்பது நமக்கெல்லாம் பெருமை அளிக்கும் விஷயமாகும். இதேபோல் உயிரி தொழில்நுட்பத்திலும் கர்நாடகம் உலக அளவில் வளர்ந்து வருகிறது. இந்த ஆட்சியில் எல்லா தரப்பு மக்களுக்கும் தேவையான எல்லா திட்டங்களும் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டு உள்ளன.
அதை நினைத்து நான் பெருமை அடைகிறேன்.
இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா பேசினார்.
இதையடுத்து அவர் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

Related Tags :
Next Story