500 மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
சேலம் மாவட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் 500 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் மின்வாரிய அலுவலகங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சேலம்,
ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குறிப்பிட்ட மின்வாரிய தொழிற்சங்கங்கள் மட்டும் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. அதன்படி தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் மின்வாரிய அலுவலகங்களின் கீழ் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் சுமார் 500 மின் ஊழியர்கள் மட்டும் பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும்பாலான ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்திருந்ததை காணமுடிந்தது. இதனிடையே, மின்வாரிய ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் உடையாப்பட்டி துணை மின் நிலையம் மற்றும் மாவட்டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆத்தூர், வாழப்பாடி, மேட்டூர் மின்வாரிய அலுவலகத்தில் குறைந்த அளவில் மின்ஊழியர்கள் பணியாற்றினர். மின்சேவை பாதிக்காத வகையில் துணை மின் நிலையங்களில் போதிய ஊழியர்களை நியமிக்கும் நடவடிக்கையில் உயர் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மின் கட்டணம் செலுத்தும் மையங்களில் ஒரு சிலர் பணிக்கு வராததால் அங்கு மட்டும் பணிகள் பாதிக்கப்பட்டன.

Related Tags :
Next Story