அம்பத்தூரில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது
அம்பத்தூரில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூர்,
சென்னை அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் நேற்று முன்தினம் இரவு அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
இதில், அவர்கள் அம்பத்தூர் சண்முகபுரம் பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 39), வளசரவாக்கம் ஆழ்வார்திருநகர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (23) என்பதும், இவர்கள் இருவரும் அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி, சங்கிலி பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு குற்றவழக்குகள் இருப்பதும் தெரிந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் போலீசார் அவர்கள் 2 பேரையும் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story