மந்திராலயாவில் தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடி தீர்வு அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு


மந்திராலயாவில் தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடி தீர்வு அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு
x
தினத்தந்தி 17 Feb 2018 4:30 AM IST (Updated: 17 Feb 2018 3:54 AM IST)
t-max-icont-min-icon

மந்திராலயாவில் தற்கொலைகளை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.

மும்பை,

மந்திராலயாவில் தற்கொலைகளை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.

மந்திராலயாவில் தற்கொலை

மும்பை நரிமன்பாயிண்ட் பகுதியில் உள்ள மந்திராலயா கட்டிடம் மாநில அரசின் தலைமை செயலகமாக செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் இங்கு வந்த விவசாயி தர்மா பாட்டீல் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதேபோல் ஹர்சல் ராவ்தே என்ற விசாரணை கைதி மந்திராலயா கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தார்.

இந்த சம்பவங்கள் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுபோன்ற தற்கொலைகளை தடுக்கும் வகையில் அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

அதிகாரிகள் சந்திப்பு

நிலுவையில் இருக்கும் மனுக்களால் அரசு செயல்படாமல் இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். எனவே இனிவரும் காலங்களில் அன்றாடம் வரும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும்.

மேலும் மந்திராலயா அதிகாரிகள் பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை அங்கு வரும் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிய வேண்டும். இதேபோல் கூடுதல் மண்டல அதிகாரிகள் வாரத்தில் 2 நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை மக்களை சந்திக்கவேண்டும். தாலுகா அதிகாரிகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிய வேண்டும்.

இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Next Story