புதுவைக்கு 24-ந் தேதி வருகை: பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார்
பிரதமர் மோடி வருகிற 24-ந் தேதி புதுவை வருகிறார். பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
புதுச்சேரி,
பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜ.க.வின் இணை அமைப்பு செயலாளராக பிரதமர் மோடி இருந்த போது கடந்த 2001-ம் ஆண்டு புதுவை வந்தார். அப்போது இங்குநடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் புதிய கோஷத்தை எழுப்பினார். அப்போது சட்டசபையில் பா.ஜ.க. அடியெடுத்து வைத்து தனது முதல் கணக்கை தொடங்கியது.
தற்போது பிரதமரான பிறகு முதல் முறையாகவும், 16 ஆண்டுகளுக்கு பிறகும் புதுச்சேரிக்கு வருகிற 24-ந் தேதி மோடி வருகிறார். லாஸ்பேட்டை விமான நிலைய மைதானத்தில் அன்று மதியம் 2 மணியில் இருந்து மாலை 6 மணிவரை பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மாலை 4 மணியளவில் பிரதமர் மோடி உரையாற்றுவார். கூட்டத்தில் 50 ஆயிரம் பொதுமக்களை திரட்ட ஏற்பாடு செய்து வருகிறோம்.
பிரதமரின் புதுவை வருகையானது மாற்று அரசியல் சக்தி உருவாவதற்கு காரணமாக அமையும். பிரதமர் மோடி புதுச்சேரியை செல்லப் பிள்ளையாக நினைத்து மாநில வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார். 50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத வகையில் ஜிப்மரில் உடல் மாற்று அறுவை சிகிச்சை மையம் அமைக்க ரூ1000 கோடி நிதி ஒதுக்கி கொடுத்துள்ளார்.
மாநில அரசு சேதராப்பட்டில் இடமும் ஒதுக்கி கொடுத்துள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மருத்துவ துறையில் இது ஒரு மைல் கல்லாக இருக்கும். ஸ்மார்ட் சிட்டி, துறைமுகம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களையும் செயல்படுத்தி புதுவை மாநில வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்.
புதுவையில் உள்ள அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் தினமும் போட்டி போட்டுக்கொண்டு முறைகேடு செய்கிறார்கள். இது தொடர்பான புகார் மனுவை ஆதாரத்துடன் அளிக்க உள்ளோம்.
இவர்களின் திருட்டுக்கு கவர்னர் கையொப்பம் இட மறுப்பதால் தான் கவர்னரை குற்றம் சாட்டுகின்றனர். பா.ஜ.க. கவர்னர்கள் காங்கிரஸ் கவர்னரைப் போல் தலையாட்டி பொம்மையாக இருக்க மாட்டார்கள். இதற்குத் தான் மாநில போலீசாருக்கு தெரியாமல் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ளக்கூடாது என முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறி வருகிறார். சட்டசபையில் 50 சதவீதம் பேர் ஊழல்வாதிகளாகவே உள்ளனர். எனவே ஆட்சியை மீட்கும் பொறுப்பு மக்களுக்கு உள்ளது. மத்திய அரசு பணம் கொடுத்தாலும் அதில் முறைகேடு செய்யத்தான் திட்டம் போடுவார்கள்.
மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியை சரியான முறையில் செயல்படுத்தும் தகுதி முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு இல்லை. எனவே ராஜினாமா செய்ய வேண்டும். சம்பாதிக்கவே காங்கிரஸ் நிர்வாகிகள் வாரிய தலைவர் பதவியை கேட்கின்றனர். மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவதற்கு எதிராக போராட வேண்டும்.
புதுவை வரும் பிரதமர் மோடியிடம், மத்திய அரசு நேரடியாக செயல்படுத்தும் திட்டங்களை துரிதப்படுத்தவும், அதன் மூலம் வேலை வாய்ப்புகளை பெருக்கவும் பா.ஜ.க. சார்பில் கோரிக்கை வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story