மதுரவாயலில் குடோன் பூட்டை உடைத்து 10 ஏ.சி.எந்திரங்கள் திருட்டு 3 பேர் கைது


மதுரவாயலில்  குடோன் பூட்டை உடைத்து 10 ஏ.சி.எந்திரங்கள் திருட்டு 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 Feb 2018 4:45 AM IST (Updated: 17 Feb 2018 11:56 PM IST)
t-max-icont-min-icon

மதுரவாயலில் குடோனின் பூட்டை உடைத்து 10 ஏ.சி. எந்திரங்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி, 

சென்னை மதுரவாயல், பல்லவன் நகர், 1–வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி(வயது 48). இவர், சென்னை கோயம்பேட்டில் ஏ.சி. எந்திரங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். 

வீட்டின் அருகே குடோன் வைத்து உள்ளார். இங்கு ஏ.சி. எந்திரங்கள் மொத்தமாக இருப்பு வைக்கப்பட்டு, தேவைப் படும்போது இங்கிருந்து விற்பனைக்காக கடைக்கு எடுத்துச் செல்லப்படும்.

திருட்டு

இந்தநிலையில் கடை ஊழியர்கள் குடோனுக்கு சென்று பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குடோனுக்குள் சென்று பார்த்தபோது, அங்கு விற்பனைக்காக வைத்து இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள 10 ஏ.சி. எந்திரங்களை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

இது குறித்த புகாரின்பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் ராஜா(22), பவித்ரன் (23), சுரேந்தர்(32) ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

3 பேர் கைது

அதில் அவர்கள்தான், 

நள்ளிரவில் அந்த குடோனின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 10 ஏ.சி. 

எந்திரங்களை திருடி வேனில் ஏற்றிச்சென்றதும், ஆனால் அதனை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வந்ததும் தெரிந்தது.

இதையடுத்து கார்த்திக் ராஜா, பவித்ரன், சுரேந்தர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 ஏ.சி. எந்திரங்கள் மற்றும் அவற்றை திருடு கொண்டு செல்வதற்கு பயன்படுத்திய வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story