தூத்துக்குடியில் போலீஸ்காரரின் தாயிடம் 7 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடியில் போலீஸ்காரரின் தாயிடம் 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் போலீஸ்காரரின் தாயிடம் 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவிலுக்கு...
தூத்துக்குடி மேல சண்முகபுரம் பெருமாள் தெருவை சேர்ந்தவர் சுந்தரவேல். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பாப்பம்மாள் (வயது 50).
இவர் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அவர், மேல சண்முகபுரம் பகுதியில் வந்தபோது அவரை 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து வந்தார்.
தங்கச்சங்கிலி பறிப்பு
அப்போது திடீரென்று அந்த வாலிபர், பாப்பம்மாள் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடினார். உடனே பாப்பம்மாள் ‘திருடன்... திருடன்...’ என்று கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அதற்குள் அந்த வாலிபர், சிறிது தூரத்தில் ஸ்கூட்டரில் தயாராக இருந்த மற்றொரு வாலிபருடன் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து பாப்பம்மாள் தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
நகை பறிகொடுத்த பாப்பம்மாளின் மகன் சுடலை தூத்துக்குடியில் போக்குவரத்து போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
போலீஸ்காரரின் தாயிடம் மர்மநபர்கள் நகை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story