குலசேகரன்பட்டினம் கோவிலில் பக்தர்களிடம் நகை திருடிய அக்காள்-தம்பி கைது
குலசேகரன்பட்டினம் கோவிலில் பக்தர்களிடம் நகை திருடிய அக்காள்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
உடன்குடி,

கோவிலுக்கு சென்ற பக்தர்களிடம்...
உடன்குடி அருகே உள்ள மணப்பாடு சுனாமி காலனியைச் சேர்ந்தவர் கைலாசம். இவருக்கு அருணாசலம் (வயது 26) என்ற மகனும், புஷ்பா (27) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தனர். இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், குலசேகரன்பட்டினம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி மற்றும் போலீசார், அருணாசலம், புஷ்பா ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் 2 பேரும் சேர்ந்து, குலசேகரன்பட்டினம் கோவிலில் பக்தர்களிடம் நகைகளை திருடி வந்தது தெரியவந்தது. இவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு உடன்குடி தாண்டவன்காட்டைச் சேர்ந்த நாராயணபெருமாள் மனைவி திலகவதி, குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு சென்றபோது, அவரிடம் 7 பவுன் தங்க சங்கிலியை திருடி உள்ளனர். மேலும் நெல்லை தச்சநல்லூரைச் சேர்ந்த ராஜேசுவரி தன்னுடைய ஒரு வயது மகளுடன் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு சென்றபோது, அந்த குழந்தை அணிந்து இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை திருடியது தெரியவந்து உள்ளது.
அக்காள்-தம்பி கைது
இதையடுத்து அருணாசலம், புஷ்பா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் திருடிய 9 பவுன் தங்க நகைகளை உடன்குடியில் உள்ள அடகு கடையில் அடகு வைத்து இருந்தனர். அவற்றை போலீசார் மீட்டனர்.
கைதான 2 பேரையும் போலீசார் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். அருணாசலம், புஷ்பாவுக்கு சொந்த ஊர் ராமநாதபுரம் எம்.ஜி.ஆர். நகர் ஆகும். இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக மணப்பாடு சுனாமி காலனியில் வசித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story