களக்காடு அருகே அடுத்தடுத்து விபத்து; கல்லூரி மாணவர் பலி
களக்காடு அருகே, அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
களக்காடு,
களக்காடு அருகே, அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
கல்லூரி மாணவர்
நெல்லை மாவட்டம் களக்காடு சிவருத்திரர் வீதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சூர்யா (வயது 19). இவர் பணகுடியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வந்தார். இவருடைய நண்பர் களக்காட்டை சேர்ந்த ராஜன் மகன் ஆண்ட்ரூஸ் (23). இந்த 2பேரும் நேற்று ஒரு மோட்டார்சைக்கிளில் மாவடியில் இருந்து களக்காட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஆண்ட்ரூஸ் ஓட்டினார்.
சாலைப்புதூர் - அண்ணாநகர் ரோட்டில் வந்தபோது, அந்த பகுதியில் மேலமாவடியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (55) மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆண்ட்ரூஸ் அந்த மொபட்டை முந்திச் செல்ல முயன்றார். இதில், மோட்டார் சைக்கிளும், மொபட்டும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
லோடு ஆட்டோ மோதியது
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ரோட்டில் சரிந்து விழுந்தது. அப்போது களக்காட்டில் இருந்து மாவடிக்கு சென்று கொண்டிருந்த லோடு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது விழுந்து கிடந்த சூர்யா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக பலியானார். மேலும் ஆண்ட்ரூஸ், ஹரிகிருஷ்ணன் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து களக்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயம் அடைந்த ஆண்ட்ரூசை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கும், ஹரிகிருஷ்ணனை திருக்குறுங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். மேலும் சூர்யாவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்ற லோடு ஆட்டோவை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story