குடிநீர் திட்டப்பணிகளை மார்ச் 15-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு
மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் நிலுவையில் உள்ள 479 குடிநீர் திட்டப்பணிகளை மார்ச் 15-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் லதா உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி, தங்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போதுள்ள குடிநீர் ஆதாரங்களை தவிர்த்து 14-வது நிதிக்குழு மானிய திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பொது நிதி, உட்கட்டமைப்பு இடை நிரவல் திட்ட நிதி மற்றும் உபரி நிதி ஆகியவற்றின் சார்பில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ரூ.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று நிலுவையிலுள்ள 479 குடிநீர் திட்டப்பணிகளை முடிப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் மார்ச் 15-ந்தேதிக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிக்கப்பட்டவுடன் கூடுதலாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 62 லட்சத்து 36 ஆயிரத்து 450 லிட்டர் தண்ணீர் கிடைக்கும். இதனால் ஊராட்சி பகுதி மக்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 84 லிட்டர் குறையாமல் குடிநீர் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.
மேலும், ஊராட்சிப் பகுதிகளில் ஏற்கனவே உள்ள குடிநீர் ஆதாரங்களில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பழுதுகளை வருகிற 28-ந்தேதிக்குள் பழுது நீக்கம் செய்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிதி ஆதாரம் இல்லாத ஊராட்சிகளுக்கு ஒன்றிய பொது நிதியை பயன்படுத்தி பழுது நீக்கம் செய்து கொள்ளவும் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து பணிகளையும் கண்காணித்திட அனைத்து ஊராட்சி ஒன்றியத்திற்கும் மாவட்ட அளவிலான மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story