இரட்டை வரி விதிப்பு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்


இரட்டை வரி விதிப்பு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 18 Feb 2018 4:15 AM IST (Updated: 18 Feb 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

இரட்டை வரி விதிப்பு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு, திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலைக்கோட்டை,

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில அளவிலான அவசர கூட்டம் நேற்று திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை செட்டியார் தலைமை தாங்கினார். செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் கே.வீ.ஆர்.கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைவர் மீனாட்சிசுந்தரம், செயலாளர் சிதம்பரம் செட்டியார் உள்பட மாநிலம் முழுவதிலும் உள்ள திரையரங்க உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;-

திரையரங்குகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தலையிட்டு கருத்துகள் கூறுவதை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. திரையரங்குகளின் கட்டிட உரிமங்கள் புதிதாக வாங்குவதற்கும், புதுப்பிப்பதற்கும், மராமத்து செய்வதற்கும் பொதுப்பணித்துறை மூலம் மட்டுமே அனுமதி பெற அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

திரையரங்குகளின் உரிமத்தை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் உள்ள இரட்டை வரி விதிப்பு முறையை (உள்ளாட்சி துறை கேளிக்கை வரி 8 சதவீதம்) முழுமையாக ரத்து செய்து திரையரங்குகள் மூடப்படுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. 

Next Story