அரசு மகளிர் கல்லூரியில் விடுதி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
அடிப்படை வசதி செய்து தர கோரி தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் விடுதி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரி வளாகத்திற்குள் மாணவிகள் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் 450 மாணவிகள் தங்கியுள்ளனர். இந்த மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வெளியே வர தொடங்கினர். இதை அறிந்த கல்லூரி நிர்வாகம் இரும்பு கதவுகளை இழுத்து பூட்டியது.
மேலும் கல்லூரிக்கு வெளியே போலீசாரும் குவிக்கப்பட்டனர். இதனால் கல்லூரி வளாகத்திற்குள் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவிகள் கோஷங்கள் எழுப்பினர்.
இது குறித்து மாணவிகள் கூறியதாவது:-
விடுதிகளில் கழிவறை வசதி சரியாக இல்லை. முறையாக பராமரிக்கப்படாமல் சுகாதார சீர்கேட்டுடன் உள்ளது. இதனால் வெளிப்புறங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. விடுதிகளில் 8 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா மூலம் கண்காணித்து மாணவிகளை மிரட்டுகின்றனர். குடிதண்ணீர் கலங்கலாக வருகிறது. இதனால் சுத்திகரிப்பு எந்திரம் வைக்க வேண்டும். அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
இரவில் கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை. இதனால் கொசு வலை வாங்கி தர வேண்டும். விடுதிகளில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுகிறது. 3 முறை விழுந்ததில் 5 மாணவிகள் காயம் அடைந்துள்ளனர். இதை சரி செய்ய வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்திடம் 9 முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக எங்களை தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர்.
பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் மாணவிகளிடம் தலா ரூ.300 வீதம் வசூல் செய்துள்ளனர். இதன் மூலம் எங்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. இந்த பணத்தை கொண்டு கேமரா வாங்கி இருக்கிறார்கள். எங்களிடம் வசூல் செய்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். கல்லூரியை சுற்றி 62 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கல்லூரியில் கழிவறைக்கு செல்லும் இடத்திலும் கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. அவற்றை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த போராட்டம் பற்றி தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் திருவள்ளுவன் விரைந்து வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், மாணவிகளின் பாதுகாப்புக்காக தான் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சிமெண்டு காரை பெயர்ந்ததை சரி செய்ய வேண்டும் என்று பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக 2 நாட்களுக்கு ஒரு முறை தான் கழிவறை சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இனிமேல் தினமும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். ஆனால் இதை ஏற்றுக் கொள்ளாமல் மாணவிகள் தங்கள் போராட்டத்தை தொடங்கினர்.
மாலையில் நிதிகாப்பாளர் வந்து, விடுதிகளுக்கு விடுமுறை விடப்பட்டு ஒரு வாரத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். கட்டிடங்கள் சீரமைக்கப்படும் என உறுதி அளித்ததால் மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டம் காலை 11.30 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது.

Related Tags :
Next Story