காவிரி தீர்ப்பில் தமிழகத்துக்கு ஆதரவாக கருத்து: நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து கன்னட அமைப்பினர் போராட்டம்
ராமநகர் அருகே காவிரி தீர்ப்பில் தமிழகத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு,
ராமநகர் அருகே காவிரி தீர்ப்பில் தமிழகத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக் காரர்கள் ரஜினிகாந்தின் உருவப்பொம்மையை தீவைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் கருத்து
காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் இறுதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், கர்நாடகம் சார்பில் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய 192 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீரில் 14.75 டி.எம்.சி.யை குறைத்து 177.25 டி.எம்.சி.யாக திறக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்புக்கு கர்நாடக அரசு மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். அதே வேளையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காவிரி இறுதி தீர்ப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் கருத்து தெரிவித்தார். அதில், ‘காவிரி நீர் பங்கீட்டில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால், மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. மறுபரிசீலனை மனுதாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
உருவப்பொம்மை எரிப்பு
இந்த நிலையில், ரஜினிகாந்தின் கருத்துக்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் கருத்தை கண்டித்து நேற்று ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா டவுனில் உள்ள தனியார் பஸ் நிலையத்தின் அருகே ‘கஸ்தூரி கர்நாடக ஜனபர வேதிகே‘ அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ரஜினிகாந்தின் உருவப்பொம்மைக்கு அவர்கள் தீவைத்து எரித்து தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.
அப்போது, அவர்கள் நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதோடு, அவருடைய கருத்து கர்நாடக மக்களின் உணர்வை புண்படுத்தும் விதமாக உள்ளது, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் அமைப்பின் தலைவர் ரமேஷ் கவுடா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story