312 அரசு பள்ளிகளில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள் தொடக்கம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
தமிழகத்தில் கூடுதலாக 312 அரசு பள்ளிகளில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்ற 125- ம் ஆண்டு விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் புதுப்பிக்கப்பட்ட கலையரங்கத்தை திறந்து வைத்து பேசினார்.
நாமக்கல் சட்டசபை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் கோரிக்கையை ஏற்று, நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலக கட்டிடங்கள் புதிதாக கட்ட நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது, விரைவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும். அரசுப் பள்ளிகளில் ‘நீட்’ தேர்வுக்காக புதிதாக 312 மையங்கள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்களின் எண்ணிக்கை 412-ஆக உயர்ந்து உள்ளது. கூரைகள் இல்லாத பள்ளி கட்டிடங்களை உருவாக்க அரசு திட்டமிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் வருகிற ஆண்டில், இப்பள்ளிக்கு கூடுதலாக 8 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம், ஆய்வுக் கூடங்களும் கட்டிக் கொடுக்கப்படும்.
மாநில அரசின் புதிய பாடத்திட்டம் நாடே திரும்பி பார்க்கும் வகையில் அமையும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை விட சிறப்பான பாடத்திட்டமாக இருக்கும். தமிழகத்தில் 593 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன, சுமார் 8 லட்சம் பேர் படித்துவிட்டு வேலை இல்லாமல் தடுமாறிக்கொண்டு இருக்கின்றனர். பிளஸ்-2 முடித்தாலே வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கிற கல்வியாக மாற்றி அமைக்கப்படும். இதன் மூலம் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பின்மை என்ற நிலை முற்றிலுமாக தவிர்க்கப்படும்.
மாணவர்களின் நலன் கருதி ‘ஹெல்ப்லைன்’ திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மாணவர்களின் சந்தேகம், மன அழுத்தம் எதுவாக இருந்தாலும், பெற்றோர்கள் குழந்தைகளின் உயர்கல்வி குறித்து ஆலோசனை பெறவும், ஆசிரியர்கள், பெற்றோர்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தவும் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. 14417 என்ற எண்ணிற்கு அழைத்து, மாணவர்களும், பெற்றோர்களும் 24 மணி நேரமும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் ஓரிரு நாட்களில் தொடங்கி வைப்பார்.
மாணவர்கள் விபத்தில் உயிரிழந்தால் ரூ.1 லட்சம், பெரிய காயம் ஏற்பட்டால் ரூ.50 ஆயிரம், சிறிய காயம் ஏற்பட்டால் ரூ.25 ஆயிரம் உதவித்தொகையை 48 மணி நேரத்தில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நடப்பு ஆண்டில் 3 ஆயிரம் பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்புகள் தொடங்கப்படும், வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்த்தப்படும்.
மேலும் 500 பள்ளிகளில் கற்பித்தலில் ரோபோவை பயன்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அமையும் வகையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 4 வண்ணங்களில் சீருடை வழங்கப்பட உள்ளது.
முன்னாக நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து, செயற்கைகோள் செயல்பாட்டின் வழியே தமிழகம் முழுவதும் 312 அரசுப்பள்ளிகளில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கி பேசினார். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி இந்த மையங்களை தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் சரோஜா, விஜயபாஸ்கர், பி.ஆர்.சுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story