மணிவிழுந்தான் ஏரியில் மீன் விற்பனை அமோகம்
தலைவாசல் அருகே மணிவிழுந்தான் ஏரியில் பிடிக்கப்படும் மீன்களின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ஒரு கிலோ மீன் ரூ.150-க்கு விற்கப்படுகிறது.
தலைவாசல்,
தலைவாசல் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகில் மணிவிழுந்தான் ஏரி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக இந்த ஏரியில் தண்ணீர் தேங்கி நின்றது. அதில் கட்லா, ரோகு, மிருகால், பொட்லா, ஜிலேபி, கண்ணாடி கெண்டை என பல வகையான மீன் குஞ்சுகள் விடப்பட்டன. தற்போது அந்த மீன் குஞ்சுகள் நன்கு வளர்ந்துள்ளன. மீன்கள் ஒரு கிலோ முதல் 1½ கிலோ வரை எடை உள்ளன. பரிசலில் சென்று மீன்கள் பிடிக்கப்பட்டு உடனுக்குடன் விற்கப்படுகிறது.
அனைத்து வகையான மீன்களும் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள். மேலும் ஏரிக்கு அருகில் வறுத்த மீன் ஒரு துண்டு ரூ.20, ரூ.25 என விற்பனை செய்யப்படுவதால், அதனை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாங்கி சாப்பிடுகிறார்கள்.
இது குறித்து மீன்களை விற்பவர்கள் கூறும் போது, மணிவிழுந்தான் ஏரியில் பிடிக்கப்படும் மீன்கள் உடனுக்குடன் விற்கப்படுகிறது. இதில் சில மீன்கள் உயிருடன் இருப்பதால், பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கிறார்கள். இதனால் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது என்றனர்.

Related Tags :
Next Story