நவிமும்பையில் சர்வதேச விமான நிலையம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்
நவிமும்பையில் சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
மும்பை,

மும்பை விமான நிலையம் நாட்டின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும். இங்கு வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
நவிமும்பையில் விமானநிலையம்
தானே, நவிமும்பை, பால்கர், ராய்காட் பகுதிகளை சேர்ந்த மக்களும் வெளியூர், வெளிநாடு செல்ல மும்பை விமானநிலையத்திற்கே வரவேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே அவர்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் நவிமும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது.
இதற்கான நிலத்தை கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் எல்லா பணிகளும் முடிந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) நவிமும்பை விமானநிலைய பணிகளை தொடங்குவதற்கான பூமி பூஜை நடைபெற உள்ளது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி விமான நிலைய பணியை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் வித்யாசாகர்ராவ், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட திரளானோர் கலந்துகொள்கின்றனர்.
உலக முதலீட்டாளர் மாநாடு
இதைத்தொடர்ந்து மும்பையில் இன்று தொடங்க உள்ள உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டையும் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்து பேசுகிறார். மராட்டிய அரசு நடத்தும் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முதலீட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள். அப்போது மராட்டியத்தில் தொழில் தொடங்குவதற்கான சாதகங்களை அரசு அதிகாரிகள் தொழில் அதிபர்களிடம் எடுத்து கூறுகின்றனர். இதையடுத்து முதலீட்டாளர்களுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளது.
மும்பை பாந்திரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில், இந்த மாநாடு 20-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. கண்காட்சி 23-ந் தேதி வரை நடைபெறுகிறது.
கன்டெய்னர் டெர்மினல்
மேலும் பிரதமர் மோடி மும்பை ஜவகர்லால் நேரு துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள 4-வது கன்டெய்னர் டெர்மினலை திறந்து வைக்கிறார்.
கடந்த 2015-ம் ஆண்டு கன்டெய்னர் டெர்மினல் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை மோடி தொடங்கி வைத்தார். தற்போது அதற்கான முதல் கட்ட பணிகள் முடிந்துள்ளது. 4-வது டெர்மினல் பகுதியில் தற்போது ஆண்டுக்கு 24 லட்சம் கன்டெய்னர்களை வைக்க முடியும். மொத்த பணிகளும் முடிந்த பிறகு இந்த எண்ணிக்கை 1 கோடியாக அதிகரிக்கும்.
பலத்த பாதுகாப்பு
பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருவதையொட்டி மும்பையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் நகரின் முக்கிய பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்திற்கு இடமான வாகனங்களை சோதனைக்கு பிறகே அனுப்புகின்றனர். இதேபோல ரோந்து பணியையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.
நவிமும்பையில் புதிய விமானநிலைய பூமி பூஜை விழா நடைபெறும் பகுதியிலும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக மும்பை வரும் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் கவர்னர் வித்யாசாகர்ராவ், முதல்-மந்திரி தேவேந்திரபட்னாவிஸ் ஆகியோர் வரவேற்கின்றனர்.

Related Tags :
Next Story