முதியோர்களுக்கு இன்ப சுற்றுலா
சுற்றுலா மீது நாட்டம் கொண்டிருக்கும் பெண்களை ஒருங்கிணைத்து பயணங்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறார், சஜ்னா அலி.
சுற்றுலா மீது நாட்டம் கொண்டிருக்கும் பெண்களை ஒருங்கிணைத்து பயணங்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறார், சஜ்னா அலி. இவருடைய முயற்சியால் 60 வயதை கடந்த பெண்களும், இளம் பெண்களும் ஆனந்தமாக சுற்றுலாத்தலங்களை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். பெண்களை மட்டுமே உறுப்பினர்களாக கொண்டிருக்கும் இந்த பயணக்குழு கேரளாவில் இயங்கி வருகிறது.
60 வயதான லீலாவுக்கு சிறுவயதில் இருந்தே முக்கிய சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்திருக்கிறது. இப்போது சஜ்னா அலி மூலமாக அந்த ஆசை நிறைவேறி இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
‘‘வயது என்பது வெறும் எண்கள் மட்டுமே. வயதானவர்களும் சுறுசுறுப்புடன் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கிறார்கள். சுற்றுலா ஆர்வத்தால் மலையேற்றம் செய்வது கூட அவர்களுக்கு கடினமாக தெரிவதில்லை’’ என்கிறார் சஜ்னா அலி.
இவர் ஆரம்பத்தில் தனியாக சுற்றுப்பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். தான் செல்லும் இடங்களில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட, பலரும் அதனை ரசித்து தங்களையும் சுற்றுப்பயணத்தில் இணைத்துக்கொண்டிருக்கிறார்கள். சஜ்னா அலி கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர். இவருடைய தந்தை லாரி டிரைவர். அதனால் சிறுவயதில் இருந்தே சஜ்னா அலிக்கு சுற்றுப்பயணங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.
‘‘என் தந்தை வெளியூர்களுக்கு சென்று திரும்பும்போதெல்லாம் அங்கு எடுத்த புகைப்படங்களை எங் களிடம் காண்பிப்பார். எனக்கும் அவருடன் செல்ல வேண்டும் என்ற ஆசை உருவானது. ஆனால் பெண்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ப சுகாதாரமான கழிவறை வசதிகள் இருக்காது என்று நீண்ட தூர பயணங்களுக்கு அழைத்து செல்ல மாட்டார். ஒரே நாளில் சென்று விட்டு வீடு திரும்பும் வகையிலான இடங்களுக்கு மட்டும் அழைத்து செல்வார். அந்த அனுபவத்தின் மூலம் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல தொடங்கினேன். ஆனால் நண்பர்களின் ஒத்துழைப்பு எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை. அதனால் நிறைய சுற்றுப்பயணங்களை தனிமையில்தான் மேற்கொள்ள வேண்டியிருந்தது’’ என்கிறார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ஒடிசாவுக்கு தனியாக சென்று திரும்பி இருக்கிறார். அங்கு இவர் எடுத்து பதிவிட்ட புகைப்படங்கள் பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
‘‘ஆரம்பத்தில் நிறைய இடங்களுக்கு தனியாகவே சென்று வந்தேன். அங்கு எடுத்த புகைப்படங்களையும், பயணங்கள் குறித்த தகவல்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். அதைபார்த்த தோழிகள் அடுத்த பயணங்களுக்கு தங்களையும் அழைத்து செல்லுமாறு வலியுறுத்தத் தொடங்கினார்கள். அப்படி ஒருசில பயணங்களுக்கு ஏற்பாடு செய்தேன். ஆனால் எதிர்பார்த்ததைவிட குறைந்த எண்ணிக்கையிலேயே கலந்து கொண்டார்கள். சில நேரங்களில் பயணத்தை ரத்து செய்யும் நிலையும் ஏற்பட்டது. ஒருமுறை கொல்லம் பகுதிக்கு சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்தேன். அங்கு செல்வதாக வாக்குறுதி அளித்தவர்களில் பாதிபேர் கூட பங் கேற்கவில்லை. எனினும் அந்த பயண அனுபவமும், அங்கு மலையேற்றம் செய்ததும் குழு பயணங்கள் மீது ஆர்வம் கொள்ள செய்தது’’ என்கிறார்.
தன்னுடைய பயண அனுபவங்களை அடிப்படையாக கொண்டு 2016-ம் ஆண்டு ‘அப்போஓபந்தாடி’ என்ற பயண குழுவை ஏற்படுத்தி இருக்கிறார். அதில் பெண்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.
‘‘பயணக்குழுவை தொடங்கியபோது பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பாதுகாப்பு மற்றும் பயணத்தின் நம்பகத்தன்மை பற்றி பெண்கள் மத்தியில் ஒருவித தயக்கம் இருந்தது. பெண்கள் மட்டுமே தனியாக சுற்றுலா செல்வது சாத்தியமா? என்ற கேள்வியும் எழுந்தது. என் வீட்டில் கூட எதிர்ப்பு கிளம்பியது. பயணத்தின் மீது ஆர்வம் கொண்ட பெண்களை நேரில் சென்று சந்தித்து அழைப்பு விடுத்தேன். ஆரம்பத்தில் தயங்கியவர்கள் இப்போது, ‘உங்களால் எப்படி ஆண் துணையின்றி சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிவர முடிகிறது’ என்று ஆச்சரியமாக கேட்கிறார்கள்’’ என்கிறார்.
இவருடைய பயணக்குழுவில், வேலை பார்க்கும் பெண்கள், வயது முதிர்ந்த பெண்மணிகள், குடும்ப தலைவிகள், ஓய்வு பெற்ற பெண்கள், இளம் பெண்கள் என பலதரப்பினரும் இடம் பெற்றுள்ளனர். இதுவரை 60-க்கும் மேற்பட்ட குழு பயணங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதில் 600-க்கும் பேற்பட்ட பெண்கள் பங்கேற்றிருக்கிறார்கள். சஜ்னா குழுபயணங்களுக்கு மத்தியிலும் தனியாக பயணம் மேற்கொள்வதையும் தொடர்ந்து கொண்டிருக்கிறார். தற்போது தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளை பயணக்குழுவினர் சுற்றிப் பார்த்திருக்கிறார்கள். அடுத்து வட மாநிலங்களில் பயணத்தை முடித்த பின்னர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார்கள்.

Related Tags :
Next Story