இசை மழை பொழியும் கல் நாதஸ்வரம்
தஞ்சை மண்ணின் மைந்தன் ராஜராஜசோழனின் கலை நயமிக்க அரசாட்சியில் மிளிர்ந்த கோவில் நகரம், கும்பகோணம்.
தஞ்சை மண்ணின் மைந்தன் ராஜராஜசோழனின் கலை நயமிக்க அரசாட்சியில் மிளிர்ந்த கோவில் நகரம், கும்பகோணம். அங்கு அமைந்துள்ள மகாமக தீர்த்தவாரியின் முதன்மை தலமான ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள பெட்டகத்தில், வரலாற்றுக்கு சாட்சியாக இருக்கும் கல் நாதஸ்வரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது வடிவமைக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் இருக்கும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. இந்த கோவிலில் இருந்து கல் நாதஸ் வரங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் இன்னொன்று சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது.
சாதாரண மர நாதஸ்வரம் 600 கிராம் எடைகொண்டது. இது அதைவிட 6 மடங்கு (3.600 கிலோ கிராம்) எடை கொண்டதாகவும், சுமார் இரண்டு அடி நீளத்துடனும் காட்சியளிக்கிறது. வட இந்தியக் குழல் இசைக்கருவியான ஷெனாய் போன்ற தோற்றத்தில் இருக்கிறது.
ஆதி இசைக்கருவியான நாதஸ்வரம், ஆச்சா என்ற மரத்தில் உருவாக்கப்படுகிறது. வைரம் பாய்ந்த பாறை போன்ற மரத்தையே இதற்காக பயன்படுத்துவார்கள். கல்நாதஸ்வரம் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து ஆதிகாலத்தில் இக்கருவியை கருங்கல்லில் செதுக்கி வாசித்திருக்கலாம் என்பது இசை ஆராய்ச்சியாளர் களின் கணிப்பாக இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியில் அமைந்திருக்கும் ஆதிநாதர் ஆழ்வார் கோவிலிலும் கல் நாதஸ்வரம் ஒன்று உள்ளது. இது சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணப்ப நாயக்கர் என்ற மன்னரால் இக்கோவிலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கல் நாதஸ்வரம் இசைக்கப் படுவதில்லை. வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கல் நாதஸ்வரத்தின் உலவுப்பகுதியானது மூன்று உறுதியான கருங்கற்களால் தனித்தனியாகச் செய்யப்பட்டு வெண்கலப்பூண் மூலம் இணைக்கப்பட்டு வெங்கல அனசுடன் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மரத்தால் செய்யப்படும் நாதஸ்வரங்களில் ஏழு ஸ்வரங்கள் இருக்கும். கல் நாதஸ்வரத்தில் 6 ஸ்வரங்களே உண்டு. அதனால் சண்முகப்ரியா, கல்யாணி போன்ற பிரதி மத்திம ராகங்களை மட்டுமே வாசிக்க முடியும். இதனை 3முதல் 3½ கட்டை சுதியில் வாசிக்க இயலும. சங்கரா பரணம், கரகரப்பிரியா, தோடி போன்ற சுத்த மத்திம ராகங்களை இந்த நாதஸ்வரத்தால் வாசிக்க முடியாது. முழுமையாகவும் அடர்த்தியாகவும் மூச்சை உள்ளே செலுத்தினால் மட்டுமே இதில் நல்இசை கிடைக்கும். கடுமையான பயிற்சி இருந்தால் மட்டுமே இதை வாசிக்க முடியும் என்று வித்வான் சாமிநாதன் பிள்ளை சொல்கிறார்.
மறைந்த நாதஸ்வர மேதை மன்னார்குடி பக்கிரியா பிள்ளை 60 வருடங்களுக்கு முன்பு கும்பேஸ்வரர் ஆலய முக்கிய விழாக்களில் இந்த கல் நாதஸ்வரத்தை வாசித்துள்ளார். அவருக்கு பின் திருக்கோவில் நாதஸ்வர வித்வானான குஞ்சுதபாதம் பிள்ளை 30 வருடங்களுக்கு மேல் வாசித்து வந்துள்ளார். அவருக்கு பின் இப்போது வரை சுவாமிநாதன் பிள்ளை கல்நாதஸ்வரத்தை வாசித்து வருகிறார். இவர், சிக்கல் சிங்கார வேலன் திருத்தல தேவஸ்தான இசைப் பள்ளியில் பணியாற்றி வந்த புகழ் பெற்ற நாதஸ்வர வித்வான் கலைமாமணி கோட்டூர் என்.ராஜரத்தினம் பிள்ளையின் சீடர்.
நாதஸ்வரம் மங்கள வாத்தியமாகும். இதனை நாகூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் வசித்து, நாகபாம்புகளை தெய்வமாகப் பூசித்த நாகர் என்ற இனத்தவரால் முற்காலத்தில் வாசிக்கப்பட்டு வந்திருக்கிறது. நாகத்தினை போன்று நீண்டிருந்ததன் காரணமாக நாகசுரம் என்னும் பெயர் ஏற்பட்டது. இதில் இருந்து இனிமையான நாதம் கிடைப்பதால் பிற்காலத்தில் நாதஸ்வரம் என அழைக்கப்பட்டிருக்கிறது. 17-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாத சங்கிரகம் என்னும் இசை நூல், துளைக் கருவிகளின் வரிசையில் இதனை நாகசுரம் என்றே குறிப்பிடுகிறது.
நாதஸ்வரத்தின் மேல் பகுதியில் சீவாளி பொருத்தப்படும். ஜீவ வளி என் பதுதான் சீவாளியாகியிருக்கிறது. ஜீவன் என்றால் உயிர். வளி என்றால் காற்று. உடலாகிய நாதஸ்வரத்திற்கு காற்றின் மூலம் சீவாளி உயிர் கொடுக்கிறது.
நான்கு வகை வேதங்களில், சாம வேதமே இசையின் அடிப்படை என்று வேத விற்பன்னர்கள் கூறுவர். ஸ,ரி,க,ம,ப, த,நி ஆகிய ஏழு ஸ்வரங்களும் ஆகாயத்திலிருந்து ஒலிக்கக் கேட்டு பூமியில் இசையின் ஆதாரமாக வடிவெடுத்தது என்று மகாபாரதம் கூறும். ஒவ்வொரு ராகத்திற்குள்ளும் ஒரு தேவதை இருப்பதாக நமது பண்டைய இசை நூல்கள் கூறுகின்றன.
ஒலியைக் கூர்ந்து நுட்பமாகக் கேட்டு அனுபவித்தவர்கள் தமிழர்கள். அவர்கள் கேட்ட ஒலியே கட்டமைக்கப்பட்டு இசையானது. முறைப்படுத்தப்பட்ட இசையை, நாதஸ்வரம் போன்ற பல்வேறு கருவிகள் நமக்கு வழங்குகின்றன.
-குடந்தை ப.சரவணன்

Related Tags :
Next Story