சத்திரப்பட்டியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ஜல்லிக்கட்டு
மதுரை சத்திரப்பட்டியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது. திமிறிய காளைகளை அடக்கி, காளையர்கள் பரிசுகளை அள்ளி சென்றனர். இதில் 38 பேர் படுகாயம் அடைந்தனர்.
அழகர்கோவில்,
மதுரை அழகர்கோவில் அருகில் உள்ள சத்திரப்பட்டியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதற்காக அங்குள்ள குருநாதன்சாமி- மருதாயி அம்மன் கோவில் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டு இருந்தது. வீரர்கள் காயம் அடையாமல் இருக்க திடல் முழுவதும் தேங்காய்நார் பரப்பப்பட்டு இருந்தது. போட்டியில் பங்கேற்பதற்காக 753 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. 574 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். நேற்று காலை வீரர்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அதன்பிறகு காலை 8.40 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கலெக்டர் வீரராகவராவ், மூர்த்தி எம்.எல்.ஏ. ஆகியோர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். நடிகர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட்டார்.
முதலில் கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன்பிறகு ஒவ்வொரு காளையாக களம் இறக்கப்பட்டது. வீரர்களும் அணி அணியாக பிரிக்கப்பட்டு முதலில் 75 வீரர்கள் காளைகளை அடக்க வந்தனர். பல காளைகள் பிடிபட்ட போதிலும் சில காளைகள் யாருக்கும் பிடிபடாமல் துள்ளிக் குதித்து ஓடின.
குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு முதலில் களம் இறக்கப்பட்ட வீரர்கள் திரும்ப அழைக்கப்பட்டு மற்றொரு பிரிவு வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். சில காளைகள் களத்தில் நின்று வீரர்களை திக்குமுக்காட செய்தது. திமிலை பிடிக்க முயன்றவர்களை தூக்கி எறிந்த காளைகள் துள்ளிக் குதித்ததை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.
காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், சைக்கிள்கள், பித்தளை பாத்திரங்கள், எவர்சில்வர் பாத்திரங்கள், பீரோ, கட்டில்கள் போன்றவை பரிசுகளாக வழங்கப்பட்டன. நடிகர் உதயநிதி ஸ்டாலின், மூர்த்தி எம்.எல்.ஏ. ஆகியோரும் பரிசுகளை வழங்கினர்.
சிறந்த மாடுபிடி வீரராக மங்கலக்குடியை சேர்ந்த விஜயகுமார் (வயது 26) தேர்வு செய்யப்பட்டு அவருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. அய்யூர் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு கார் பரிசாக வழங்கப்பட்டது.
நேரம் இல்லாததால் ஜல்லிக்கட்டில் பங்கேற்காத காளைகளுக்கும் தங்கக்காசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டின் போது மாடுபிடி வீரர்கள் 38 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்பாடுகளை சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டு விழா குழு தலைவர் மதிவாணன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story