மூலனூர் அருகே மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 என்ஜினீயர்கள் சாவு
மூலனூர் அருகே மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மூலனூர்,
குமரிமாவட்டம் கல்குளம் அருகே உள்ள கம்பன்மூடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ரெஞ்சிஷ்குமார் (வயது 23). இதுபோல் மணியங்குழி பகுதியை சேர்ந்தவர் பாலகணேஷ். இவரது மகன் கார்த்திக் (24). இவர்கள் இருவரும் கோவை உக்கடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில் விடுமுறை காரணமாக அவர்கள் இருவரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். பின்னர் மோட்டார்சைக்கிளில் அவர்கள் இருவரும் மீண்டும் கோவைக்கு புறப்பட்டனர். மோட்டார்சைக்கிளை ரெஞ்சிஷ்குமார் ஓட்டி வந்தார். கார்த்திக் பின்னால் அமர்ந்திருந்தார்.
இவர்கள் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கோனேரிபட்டி பக்கம் வந்த போது ரெஞ்சிஷ்குமார் தூங்கிவிட்டதாக தெரிகிறது. இதனால் ரெஞ்சிஷ்குமாரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி ஓடிய மோட்டார்சைக்கிள் அந்த பகுதியில் இருந்த சாலையோர மரத்தில் பலமாக மோதியது.
இந்த விபத்தில் ரெஞ்சிஷ்குமார், கார்த்திக் ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். உடனடியாக அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரெஞ்சிஷ்குமார் பரிதாபமாக இறந்தார். கார்த்திக் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மூலனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான என்ஜினீயர்களின் உடல்களை பார்த்து அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரை கண்கலங்கச்செய்தது.

Related Tags :
Next Story