ரேலியா அணையை மாசுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
ரேலியா அணையை மாசுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெகதளா பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட கட்டபெட்டு, ஆருவ ஒசஹட்டி கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.இந்த கிராமத்திற்கு ரேலியா அணையில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் இந்த அணையை சுற்றி பார்க்க வருபவர்கள், நீராதாரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் உணவுக்கழிவுகளை கொட்டிச்செல்வதால் அணை மாசடைந்து வந்தது.
கிராம மக்களின் கோரிக்கைக்கு இணங்க ஜெகதளா பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பொதுமக்கள் உதவியுடன், அணையை ஒட்டிய பகுதிகளில் தேங்கி இருந்த குப்பைக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் சமீப காலமாக, அணையை சுற்றி பார்க்க வருபவர்களின் அத்துமீறல் தொடர்ந்ததால் தண்ணீர் மாசுப்பட்டதுடன், அணைப்பகுதி முழுவதும் குப்பைகள் தேங்கி, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. ஆருவ ஒசஹட்டி மக்கள் நீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி பேரூராட்சி செயல் அலுவலர் ரவி தலைமையில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ரேலியா அணைப்பகுதியில் மீண்டும் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் ரவி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பலகையை திறந்து வைத்து பேசிய தாவது:-
நீராதாரங்களை மாசுப்படுத்துவது சட்டப்படி குற்றம். பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில், பிளாஸ்டிக் மற்றும் உணவு கழிவுகளை கொட்டுவதும், வாகனங்களை கழுவுவது மதுப்பாட்டில்களை வீசி, சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள்.
இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், பேரூராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், நீர் ஆதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு, எதிர்காலத்தில் பாதுகாப்பு வேலி அமைப்பதுடன், ஆருவ ஒசஹட்டி, பெட்டட்டி இணைப்புச்சாலை மேம்படுத்தப் படும்.
மேலும் கிராமத்தில் பொது இடங்களிலும், கழிவுநீர் கால்வாய்களிலும் பிளாஸ்டிக் மற்றும் காய்கறி கழிவுகளை கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். குப்பை கழிவுகளை பேரூராட்சி குப்பை வாகனத்தில் போட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story