5 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும், கலெக்டருக்கு கிராம மக்கள் கோரிக்கை
சீபுரம்- பெரியசோலை இடையே 5 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடலூர்,
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சியில் சீபுரம், எல்லமலை, பெரியசோலை, ஆரோட்டுப்பாறை உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளன. இங்கு பிரிவு-17 நிலம் இருப்பதால் சாலை, கட்டுமானம் உள்ளிட்ட அடிப்படை வளர்ச்சி பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடலூரில் இருந்து பெரியசோலை வரை 26 கி.மீட்டர் தூரம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக கிடந்தது. இதனால் பொதுமக்களின் கோரிக்கைக்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கூடலூர்- சீபுரம் வரை 20 கி.மீட்டர் தூரம் சாலை புதுப்பிக்கப் பட்டது.
அதன்பின்னர் புதுப்பிக்கப்படவில்லை. இதனால் சீபுரம்- எல்லமலை வழியாக பெரியசோலைக்கு செல்லும் 6 கி.மீட்டர் தூரச்சாலை குண்டும் குழியுமாக கிடக்கிறது. இதனை புதுப்பிக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் வனத்துறை தடை விதித்துள்ளதால் சாலை பணி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள் ளனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு சீபுரம், எல்லமலை, பெரியசோலை கிராம மக்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதில் அவர்கள் கூறி உள்ள தாவது:-
கூடலூர்- சீபுரம் வரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 20 கி.மீட்டர் தூரம் சாலை புதுப்பிக்கப்பட்டது. ஆனால் சீபுரத்தில் இருந்து எல்லமலை, பெரியசோலை செல்லும் 6 கி.மீட்டர் தூர சாலை புதுப்பிக்கப்படவில்லை. இதனை கண்டித்து கடந்த 17-04-17 அன்று அனைத்து கிராம மக்களையும் திரட்டி கூடலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி உள்பட அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
அப்போது சீபுரம் முதல் பெரியசோலை வரை சாலை புதுப்பிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. எனவே பணி உடனடியாக தொடங்கப்படும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை சாலை புதுப்பிக்கப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்த போது சாலை அமைக்க வனத்துறை தடை விதித்துள்ளதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக வனத்துறையினரை சந்தித்தால் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு கடிதம் இருந்தால் மட்டுமே சாலை அமைக்க அனுமதி அளிக்கப்படும் என விளக்கம் அளிக்கப்படுகிறது.
எனவே 5 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் சாலைப்பணியை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டுகிறோம். தற்போது பழுதடைந்த சாலையில் பயணம் செய்வதால் அரசு பள்ளிக்கூட மாணவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் கிராம மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சீபுரம்- பெரியசோலை சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் கிராம மக்கள், மாணவர்கள் ஒன்று திரண்டு கூடலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு அடுத்த மாதம் 6-ந்தேதி அன்று மறியல் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story