தாமிரபரணி புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தால் சிவகாசி, திருத்தங்கல், ராஜபாளையம் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்
சிவகாசி, திருத்தங்கல் மற்றும் ராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் புதிய குடிநீர் திட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
சிவகாசி,
மாவட்டத்தில் ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தாமிரபரணி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு ராஜபாளையம் நகராட்சிக்கு ரூ. 197.79 கோடி, சிவகாசி நகராட்சிக்கு ரூ. 117.34 கோடி, திருத்தங்கல் நகராட்சிக்கு ரூ. 88.91 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணி தொடங்கப்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து, அதன் உட்புறத்தில் நீர் எடுக்கும் கிணறு அமைத்து அங்கிருந்து 225 குதிரைத் திறன் சக்தி கொண்ட மின் இறைப்பான் மூலம் ஆற்று நீர் உந்தப்பட்டு இரும்பு குழாய் மூலம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 46.08 மில்லியன் லிட்டர் ஆற்றுநீர் சுத்திகரிப்பு செய்யக்கூடிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தலைமையிடத்தில் கட்டப்படவுள்ள 23.20 லட்சம் கொள்ளளவு கொண்ட நீர் சேகரிப்பு தொட்டியில் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து மானூரில் அமைக்கப்பட்டுள்ள நீர் உந்து நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும். பின்னர் பனவடலி சத்திரம் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் கட்டப்படவுள்ள குடிநீர் தொட்டியில் சேகரிக்கப்பட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது.
சங்கரன்கோவிலில் அமைக்கப்படவுள்ள பொது நீர் சேகரிப்பு நிலையத்திலிருந்து 35 குதிரை திறன் கொண்ட மின் இறைப்பான் மூலம் 48.40 கி.மீ. தொலைவில் சிவகாசியில் கட்டப்படவுள்ள 2.65 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் சேகரிப்பு தொட்டிக்கு குடிநீர் கொண்டு வரப்படும். இது 2.65 லட்சம் நீர் சேகரிப்பு தொட்டி மற்றும் ஏற்கனவே உள்ள 3.60 லட்சம் நீர் சேகரிப்பு தொட்டி, 1.80 லட்சம் நீர் சேகரிப்பு தொட்டியுடன் இணைக்கப்படும்.
இந்த 3 தொட்டிகளில் சேகரிக்கப்படும் குடிநீர் சிவகாசி நகராட்சியில் ஏற்கனவே உள்ள 8 உயர்மட்ட நீர் தேக்கத் தொட்டிகளில் ஏற்றப்படும். மேலும் புதிதாக 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு உயர்மட்ட நீர் தேக்கத் தொட்டி மற்றும் 3.80 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு உயர்மட்ட நீர் தேக்கத் தொட்டியும் கட்டப்படவுள்ளது. மொத்தம் உள்ள 10 உயர்மட்ட நீர் தேக்கத் தொட்டிகளில் ஏற்றப்படும் குடிநீர் அங்கிருந்து புதிய பகிர்மான அமைப்பு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும். சிவகாசி நகராட்சி பகுதியில் 117.52 கி.மீ. நீளத்திற்கு புதிதாக குழாய்கள் பதிக்கப்பட்டு, மேலும் 22,889 புதிய வீட்டு இணைப்புகள் வழங்கிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சங்கரன்கோவிலில் அமைக்கப்படவுள்ள பொது நீர் சேகரிப்பு தொட்டியிலிருந்து சிவகாசி நீர் சேகரிப்பு தொட்டி வரைகுழாய் பதிக்கப்படும். சிவகாசியிலிருந்து திருத்தங்கலில் புதிதாக அமைக்கப்படவுள்ள 3.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் சேகரிப்புத் தொட்டி வரை குழாய் பதிக்கப்படவுள்ளது. அங்கிருந்து 3 வழித்தடங்கள் மூலம் திருத்தங்கல் நகர் பகுதியில் ஏற்கனவே உள்ள 7 உயர்மட்ட நீர் தேக்கத் தொட்டிகள் மற்றும் புதிதாக கட்டப்படவுள்ள 2 நீர் தேக்கத் தொட்டிகள் என மொத்தம் 9 உயர்மட்ட நீர் தேக்கத் தொட்டிகளில் நிரப்பப்படும்.
அங்கிருந்து புதிதாக பதிக்கப்படவுள்ள பகிர்மான அமைப்பு மற்றும் ஏற்கனவே உள்ள பகிர்மான அமைப்பு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படவுள்ளது. மேலும் இத்திட்டத்தில் 15,741 புதிய வீட்டு இணைப்புகள் வழங்கிடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் முடிவுறும் தருவாயில் 3 நகராட்சிகளை சேர்ந்த மக்களுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் குடிநீர்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் இந்த திட்ட பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென்பதே அனைவரது விருப்பமாகும்.

Related Tags :
Next Story