பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
சட்ட உரிமைகள் குறித்து தன்னார்வ சட்ட பணியாளர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பயிற்சி முகாமில் முதன்மை மாவட்ட நீதிபதி ரவி பேசினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் தன்னார்வ சட்ட பணியாளர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி முகாம் பாலக்கோடு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி ரவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சார்பு நீதிபதிகள் சண்முகவேல், சையத்பர்கத்துல்லா, மாவட்ட உரிமையியல் நீதிபதி விஜய் கார்த்திக், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுகள் ஜீவா பாண்டியன், சந்தான கிருஷ்ணசாமி ஆகியோர் பயிற்சி முகாமின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்கள்.
இந்த முகாமில் முதன்மை மாவட்ட நீதிபதி ரவி பேசுகையில், பொதுமக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக பல்வேறு சட்டங்கள் உள்ளன. இந்த சட்ட உரிமைகள் குறித்து தன்னார்வ சட்ட பணியாளர்கள், பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த பணியை மேற்கொள்ள பல்வேறு வகையான சட்டங்கள் குறித்த தெளிவை பெறுவது அவசியம். அதற்கு இந்த பயிற்சி முகாமை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.
முகாமில் மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி, தாசில்தார் தமிழரசன், வட்ட வழங்கல் அலுவலர் பொல்லியப்பா, அமைப்புசாரா தொழிலாளர் நலத்துறை அதிகாரி செந்தில்ராஜா, சிறுவர் சீர்திருத்தப்பள்ளி கண்காணிப்பாளர் சவுந்திரராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயா, குழந்தைகள் நலக்குழும உறுப்பினர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த சட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்கள்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சிறப்பு சட்டங்கள், சிறுவர் நீதி சட்டங்கள், குழந்தை நலக்குழும பணிகள், போக்சோ சட்டம், வருவாய்த்துறை சார்ந்த சட்டங்கள் குறித்து இந்த முகாமில் விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வ சட்டப்பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story