பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,700 கோடி மோசடி: பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன்? டி.ராஜா எம்.பி. கேள்வி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,700 கோடி மோசடி நடந்து இருப்பது குறித்து பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன்? என்று இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா கேள்வி விடுத்தார்.
புதுச்சேரி,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு நடந்துள்ளது. இந்த மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதுவையில் அகில இந்திய மாநாட்டை நடத்தினோம். வருகிற ஏப்ரல் மாதம் 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அகில இந்திய மாநாடு கேரள மாநிலம் கொல்லத்தில் நடைபெறுகிறது.
மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்த பின் நாடு நெருக்கடியான சூழலை எதிர்கொண்டுள்ளது. மோடி தலைமையிலான அரசு பெரும் முதலாளிகள், தொழிலதிபர்களுக்கு ஆதரவாக உள்ளது. நாட்டு மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.
ஜி.எஸ்.டி. காரணமாக ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு, குறுந்தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முதலாளிகளுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது. பாரதீய ஜனதா அரசின் கடைசி பட்ஜெட் வளர்ச்சியை ஆதாரமாக கொண்டதல்ல. அரசின் தோல்வியை ஒப்புக்கொள்ளும் பட்ஜெட்டாக உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மக்களை திசை திருப்பி ஏமாற்றுகிறது. பொய்யான அறிக்கைகளை தருகிறது. பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ.11,700 கோடிக்கு மிகப்பெரிய கொள்ளை நடந்துள்ளது. மக்கள் பணம் கொள்ளை போனது எப்படி? ரிசர்வ் வங்கி என்ன செய்தது? இந்த விஷயத்தில் பிரதமர் வாய் திறக்காமல் இருக்க என்ன காரணம்? நிரவ் மோடி எப்படி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்? இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்.
மத்திய அரசின் பெரும் அதிகார மையமாக ஆர்.எஸ்.எஸ். செயல்படுகிறது. போருக்கு ராணுவத்தை தயார் செய்ய 6 மாதம் ஆகும். ஆனால் ஆர்.எஸ்.எஸ். படையை 3 நாளில் தயார் செய்துவிடலாம் என்று கூறி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகாவத் ராணுவத்தை சிறுமைப் படுத்தி உள்ளார். பழங்குடியினர், சிறுபான்மையினர், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறார்கள். ஜனநாயகம் நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளே கூறியுள்ளனர்.
மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு புதுவையை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. புதுவை கவர்னர் கிரண்பெடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதித்து செயல்படவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணக்கமாகவும் செயல்படவும் இல்லை. பாராளுமன்றத்திலும் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது.
கவர்னர் என்பவர் ஏதேச்சதிகாரமான முறையில் செயல்பட முடியாது. புதுவை கவர்னரின் நடவடிக்கை ஜனநாயகத்தை சீர்குலைக்கிறது. புதுவை மாநிலத்துக்கு தேவையான நிதியையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. இதுதொடர்பாக பல போராட்டங்களை நடத்த உள்ளோம்.
இவ்வாறு டி.ராஜா எம்.பி. கூறினார்.

Related Tags :
Next Story