வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேர் கைது
நெல்லையில் வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 45 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
நெல்லை,
நெல்லை மாநகர பகுதியில் நடந்து செல்லும் பெண்களிடமும், கணவருடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்களிடமும் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. வழிப்பறி சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (கூடுதல் பொறுப்பு) கபில்குமார் சரத்கர் உத்தரவின் பேரில், துணை போலீஸ் கமிஷனர் (குற்றப்பிரிவு) பெரோஸ்கான் அப்துல்லா மேற்பார்வையில் உதவி ஆணையாளர் வரதராஜன் தலைமையில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. ‘பி’ காலனி பகுதியில் தனிப்படை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், பாளையங்கோட்டை அன்புநகரை சேர்ந்த சங்கரன் மகன் மகராஜன் என்ற ராஜா (வயது 24), கே.சி.டி. நகரை சேர்ந்த ஐசக் ஜெயராஜ் மகன் டேனியல் பிரிட்டோ (23), தாழையூத்தை சேர்ந்த பாலு மகன் உடையார் என்ற விக்னேஷ் (23) என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் சேர்ந்து நெல்லை மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் பெண்களிடம் நகை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். சிறப்பாக பணியாற்றி குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீசாரை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் கபில்குமார் சரத்கர் பாராட்டினார்.

Related Tags :
Next Story