மாவட்ட செய்திகள்

மினி பஸ்சில் பெண்களுக்கு பாலியல் தொல்லை, கலெக்டரிடம் புகார் + "||" + Mini bus to the harassment of women, Report to the Collector

மினி பஸ்சில் பெண்களுக்கு பாலியல் தொல்லை, கலெக்டரிடம் புகார்

மினி பஸ்சில் பெண்களுக்கு பாலியல் தொல்லை, கலெக்டரிடம் புகார்
மினி பஸ்சில் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பஸ் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் போராட்டம் நடத்தி, கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.
மதுரை,

மதுரை குட்லாடம்பட்டியை சேர்ந்த பெண்கள், தங்கள் பகுதியில் இயக்கப்படும் மினி பஸ்சை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- வாடிப்பட்டியில் இருந்து குட்லாடம்பட்டி வழியாக மினி பஸ் இயங்கி வருகிறது.


அந்த பஸ்சில் செல்லும் பெண்களுக்கு, பஸ் தொழிலாளர்களால் பாலியல் தொல்லை ஏற்படுகிறது. இது குறித்து போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கிராம பெரியவர்கள் கூட்டம் கூட்டி, அந்த மினி பஸ்சில் பயணம் செய்வதில்லை என முடிவு செய்தோம்.

இதன் தொடர்ச்சியாக ஆட்டோவில் ஏறி பயணம் செய்து வருகிறோம். எங்கள் முடிவால், ஆத்திரமடைந்த மினி பஸ் உரிமையாளர்கள், ஊழியர்கள் எங்கள் கிராம பெண்களையும், எங்கள் ஊருக்கு ஆட்டோ இயக்கும் டிரைவர்களையும் அடிக்கடி தாக்கி வருகின்றனர். இது குறித்து போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கலெக்டர் தலையீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.