கத்தி முனையில் பெண்ணை தாக்கி 8½ பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு


கத்தி முனையில் பெண்ணை தாக்கி 8½ பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 20 Feb 2018 3:45 AM IST (Updated: 20 Feb 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே பட்டப்பகலில் கத்தி முனையில் பெண்ணை தாக்கி 8½ பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்,

கரூர் அருகே வாங்கல் பக்கம் பண்டுதகாரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. நிதி நிறுவன அதிபரான இவரது மனைவி மணிகேமலை(வயது 35). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் மணிமேகலை நேற்று காலை பண்டுதகாரன்புதூரில் இருந்து பால்வார்பட்டிக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், மணிமேகலையை வழி மறித்து முகவரி விவரம் கேட்பது போல பேசியுள்ளனர்.

அப்போது மர்மநபர்கள் திடீரென மணிமேகலையை தாக்கி அவரது கழுத்தில் இருந்த தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றனர். அவர் சங்கிலியை பிடித்து கொண்ட போது கத்தியை எடுத்து காண்பித்து மிரட்டி தாக்கினர். இதில் அதிர்ச்சியடைந்த அவர் சுதாரிப்பதற்குள் கழுத்தில் கிடந்த 8½ பவுன் தாலிச்சங்கிலியை மர்மநபர்கள் பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். இது குறித்து வாங்கல் போலீஸ் நிலையத்தில் மணிமேகலை புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை தாக்கி தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story