தமிழக அரசு துறையில் உதவி என்ஜினீயர் வேலை


தமிழக அரசு துறையில் உதவி என்ஜினீயர் வேலை
x
தினத்தந்தி 20 Feb 2018 5:38 AM GMT (Updated: 20 Feb 2018 5:38 AM GMT)

தமிழக மின்உற்பத்தி மற்றும் வினியோக நிறுவனத்தில் அசிஸ்டன்ட் என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

மிழக மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் துணை நிறுவனம் டான்ஜெட்கோ  (TANGEDCO). தமிழக மின்உற்பத்தி மற்றும் வினியோக நிறுவனமான இதில் தற்போது அசிஸ்டன்ட் என்ஜினீயர் (உதவி பொறியாளர்) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 325 பேர் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இதில் எலக்ட்ரிக்கல் பிரிவில் 300 இடங்களும், சிவில் பிரிவில் 25 இடங்களும் உள்ளன. எலக்ட்ரிக்கல் பிரிவு பணிகளில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு 273 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் இன்ஸ்ட்ருமென்டேசன் என்ஜினீயரிங் பிரிவுக்கு 21 இடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்பர்மேசன் டெக்னாலஜி என்ஜினீயரிங் 6 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் விலக்கு பெறுபவர்களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. 1–7–2017–ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.

கல்வித்தகுதி: பணியிடங்கள் உள்ள எலக்ட்ரிக்கல் சார்ந்த என்ஜினீயரிங் பாடப்பிரிவுகள் மற்றும் சிவில் என்ஜினீயரிங் பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்:  பொது மற்றும் பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி,  டி.சி. பிரிவினர், ரூ.590 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டண விலக்கு பெறும் மற்ற பிரிவினர் 295 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 28–2–2018–ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும்  www.tangedco.gov.in   என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

Next Story