ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு


ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
x
தினத்தந்தி 20 Feb 2018 11:22 AM IST (Updated: 20 Feb 2018 11:22 AM IST)
t-max-icont-min-icon

ஆவின் நிறுவனத்தின் பல்வேறு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் அமைப்பில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சீனியர் பேக்டரி அசிஸ்டன்ட், டெக்னீசியன் உள்ளிட்ட பணிக்கு 38 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள், 12–ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். 16–3–2018–ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.

கோவை மாவட்டத்தில் மேலாளர், டிரைவர், எக்சிகியூட்டிவ் அதிகாரி, எக்ஸ்டென்சன் ஆபீசர், ஜூனியர் எக்சிகியூட்டிவ் போன்ற பணிக்கு 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். முதுநிலை பட்டதாரி, இளநிலை பட்டதாரி மற்றும் 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இதில் பணியிடங்கள் உள்ளன. 27–2–2018–ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். ஈரோடு மாவட்டத்தில் மேலாளர், எக்சிகியூட்டிவ் உள்ளிட்ட பணிக்கு 6 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 28–2–2018–ந் தேதிக்குள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். புதுக்கோட்டையில் மேலாளர் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்படுகிறார். 6–3–2018–ந் தேதிக்குள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இவை பற்றிய விவரங்களை http://www.aavinmilk.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story