செவ்வாய் செல்லும் விண்கல்
ஒரு விண்கல் மார்ஸ் 2020 திட்டத்தில் செவ்வாய் செல்லும் விண்கலத்தில் அனுப்பப்பட இருக்கிறது.
நாசா 2020–ல் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பும் திட்டத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே செவ்வாயில் இருந்து பூமியில் விழுந்த விண்கற்கள் என்று கருதப்படும் சில கற்களை அவர்கள் பல்வேறு சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இவற்றில் ஒரு விண்கல் மார்ஸ் 2020 திட்டத்தில் செவ்வாய் செல்லும் விண்கலத்தில் அனுப்பப்பட உள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த விண்கல் ஓமன் நாட்டில் கண்டெடுக்கப்பட்டதாகும். ‘ஷா அல் உஹாய்மிர் 008’ என்று பெயரிடப்பட்ட அந்தக் கல் செவ்வாய்க்கு அனுப்பப்பட்டு அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆராயப்பட்டால், மனிதன் செவ்வாயில் இறங்குவதற்கு பல்வேறு வகையில் துணைபுரியும் என்று நம்பப்படுகிறது.
Related Tags :
Next Story