மாவட்ட செய்திகள்

மரக்கடையில் பயங்கர தீ விபத்து:ரூ.5 லட்சம் மரங்கள் எரிந்து சாம்பல் + "||" + Fire accident in wooden shop: 5 lakh trees Burned ash

மரக்கடையில் பயங்கர தீ விபத்து:ரூ.5 லட்சம் மரங்கள் எரிந்து சாம்பல்

மரக்கடையில் பயங்கர தீ விபத்து:ரூ.5 லட்சம் மரங்கள் எரிந்து சாம்பல்
தூத்துக்குடியில் மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மரங்கள் சாம்பலாகின.
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மரங்கள் சாம்பலாகின.

மரக்கடை


தூத்துக்குடி டபிள்யூ.ஜி.சி. ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசகன் (வயது 57). இவர் அந்த பகுதியில் பல வருடங்களாக மரக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடையில் வியாபாரத்துக்காக சவுக்கு, மூங்கில், உள்ளிட்ட பல வகை மரங்கள் வைக்கப்பட்டு இருந்தன.


நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மேல் கடையை பூட்டி விட்டு, சீனிவாசகம் வீட்டுக்கு சென்றார். நேற்று அதிகாலையில் அந்த மரக்கடையில் இருந்து திடீரென புகை வந்தது. அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சென்று பார்த்தனர். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த மரங்கள் தீ பிடித்து எரிந்து கொண்டு இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

ரூ.5 லட்சம் சாம்பல்

இதனையடுத்து தீயணைப்பு நிலைய மாவட்ட அலுவலர் (பொறுப்பு) தவமணி, தூத்துக்குடி நிலைய அலுவலர் நட்டார் ஆனந்தி ஆகியோர் தலைமையில் 6 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைந்தனர்.

இதுகுறித்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், ‘இந்த விபத்து மின் கசிவால் ஏற்பட்டதாகவும், இதில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான மரங்கள் எரிந்து சாம்பலாகி விட்டதாகவும், போலீசார் தெரிவித்தனர்.